திருமணத்தை முன்னிட்டு தளபாடங்கள் அன்பளிப்பு

சனி ஜூலை 06, 2019

புலம்பெயர் தேசத்தில், சுவிற்சர்லாந்தில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட திரு.திருமதி கண்ணன் ஜெகதா தம்பதிகளின் திருமணத்தை முன்னிட்டு வெண்கரம் படிப்பகத்திற்கு ஒரு தொகுதி (ரூ.50,000) தளபாடங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

s

வெண்கரம் படிப்பகத்தின் புலம்பெயர் செயற்பாட்டாளர் திரு.லோகேஸ்வரன் அவர்கள் இந்தத் தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

s

திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட கண்ணன் ஜெகதா தம்பதிகளும் திரு.லோகேஸ்வரன் குடும்பத்தினரும் நீண்ட காலம் சீரும் சிறப்புடனும் வாழவேண்டும் என வெண்கரம் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துகின்றனர்.

s