திருப்பதிக்கு பயணமானார் மைத்திரி!

செவ்வாய் ஏப்ரல் 16, 2019

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு,   சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழு,  இந்தியா-ஹைதராபாத்துக்கு சென்றுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.177 விமானத்திலேயே, இக்குழு, இன்று காலை 7:40க்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது,   சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என அறியமுடிகின்றது.