திருடிய பொருட்களுடன் சிக்கிய நபர்

சனி ஓகஸ்ட் 06, 2022

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு போயுள்ளதாக வட்டுக்கோட்டை காவல் துறை நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் 22 வயதான ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 8 மோட்டார் மற்றும் 8 மின் மோட்டார் இயந்திரங்களையும் கைப்பற்றினர்.

சந்தேகநபருக்கு எதிராக மல்லாகம்  நீதிவான் நீதிமன்றின் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றர்.