திருவனந்தபுரம் விமான நிலையம்- அதானி குழுமத்திற்கு வழங்க கேரள முதல்வர் எதிர்ப்பு!
வியாழன் சனவரி 21, 2021

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேரள சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்க கூடாது என்றார்.
மேலும் விமான நிலைய நிர்வாகத்தில் எந்த முன் அனுபவமும் இல்லாத ஒரு குழுவிடம் இந்த ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
முதலாளிகளின் நலனுக்கு ஏற்ப இந்தத் துறையில் ஏகபோக வாய்ப்புகளை உருவாக்குவதே மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் விமர்சித்தார்.