திடீர் தீ விபத்தில் கடைகள் முற்றாக எரிந்து சேதம்!!

சனி செப்டம்பர் 19, 2020

நுவரெலியா–இராகலை சிறீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று (19) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 01.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சில்லறை கடை,கோழி கடை மற்றும் தொடர்பாடல் நிலையம் ஆகிய மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ,காயங்களோ ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் பொருட்சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.