தியாகிதீலீபனின் 32ம்ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள்!

வெள்ளி செப்டம்பர் 20, 2019

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாதுதன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுசெப்ரம்பர் மாதம் 22ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மெல்பேணில் இடம்பெறவுள்ளது. 

ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன்காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். அடிப்படையான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.

பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.  ஆண்டுதோறும் நடைபெறுவதைப் போல் இம்முறையும் தியாகதீப கலைமாலை என்ற தாயகப்பாடல்களின் இசைநிகழ்வும் இடம்பெறும்.

இடம்:  St Christopher’s Primary School Hall, 5 Doon Avenue, GLEN WAVERLEY, VIC 3150 (Off Blackburn Road, Melway Ref: 61 K12).
காலம்: 22/09/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி.
தொடர்பு: ‎0433 002 619 or 0404 802 104

நிகழ்வு ஏற்பாட்டுக்குழு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோறியா