தியாகதீபம் ஏற்றி விடுதலைத்தீ 33 ஆண்டுகளில்

புதன் செப்டம்பர் 30, 2020

உலகின் எவராலும் செய்ய முடியாத அற்புத தியாகத்தைப் புரிந்தவன் தியாக தீபம் லெப். கேணல். திலீபன். கடந்து வந்த காலத்திலும் சரி இனிவரப்போகும் காலத்திலும் சரி எவரும் அவ்வாறான உயிர் தியாகத்தை செய்யப்போவதில்லை என்பதே உண்மை. 

இந்த உன்னதத்தை பௌத்த சிங்களபேரினவாதம்  இந்த தியாகம் தாம் பின்பற்றி நிற்கும் புத்த சமயத்தை விட மிஞ்சிவிடுமோ சிங்கள மக்கள் அதை நேசிக்கும் நிலை ஏற்பட்டு விடுமோ தீலீபனுக்கு சிங்கள மனிதநேயம் கொண்டவர்கள் ஒளியேற்றி வணக்கம் செய்து விடுவார்கள் என்ற பயத்தில் பொய்யான கட்டுக்கதைகளையும், பயங்;கரவாத பட்டம் கட்டி, அந்த தியாக தெய்வத்தின் தியாகத்தையும் செயலையும் பழிசொல்லியும், தமது புதல்வனுக்கு தமிழீழ தேசமெங்கும் தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளையும், வணக்க நிகழ்வுகளை செய்ய விடக்கூடாது என்று நீதி மன்றத்தைக் கொண்டு தடையுத்தரவை போட்டிருந்தது. 

அதையும் மீறி எதுவந்தாலும் வரட்டும் எவற்றையும் எதிர்கொள்வோம் என்று தமிழர் தாயகத்தில் மக்கள் புரட்சி வெடித்திருந்தது. இதே போன்று புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு பெரும் எழுச்சியாக நினைவேந்தப்பட்டது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்நிகழ்வுகளில் இளையோர்கள் அதிக நினைவேந்தலினை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் பிரான்சில் பாரிசின் புறநகர் பகுதியில் தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லின் முன்பாக 12 நாட்களும் நினைவுச் சுடர் ஏற்றியதோடு இளையவர்கள் இரண்டு நாட்கள் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்பும் இருப்பதை செய்ததோடு அவர்கள் பிரென்சு மக்களுக்கு திலீபனின் தியாகத்தை எடுத்தியம்பியதின் பிரகாரம் இவ் நிவைவேந்தல் நிகழ்வில் பல பிரெஞ்சு பிரமுகர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்களின் வணக்க நிகழ்வுக்கு அமைவாக வணக்கம் செலுத்தியதோடு தமது மன எண்ணங்கள் பற்றிய கருத்துக்களையும் மேடையிலே தமிழ் மக்களோடு பகிர்ந்து கொண்டனர். 

தியாக திபம் லெப். கேணல் திலீபனது உயிர்த் தியாகம் தமிழ் மக்களை மட்டுமல் பல்லின மக்களின் மனதையும் தொட்டிருக்கின்றது. 33 ஆண்டுகள் கழிந்தும் அவருடைய தியாகம் மறைந்து மருகியும் போகாமல் இன்னும் முழுவீச்சுக்கொண்டு அடுத்த தலைமுறை மனங்களைப் பற்றி இன்னும் பெரும் விடுதலைத்தீயாக புலத்திலும், தாய்நிலத்திலும் கொழுந்து விட்டு எரிவதைக் காண்கின்றோம்.

 இது வரும் காலத்தில் சிங்களமும், சிங்களத்தின் எலும்புத்துண்டை நக்கிப்பிழைக்கும் ஒரு கூட்டமும் வரப்போகும் தேசத்தின் உன்னத கண்கண்ட மாவீரர் தெய்வங்களின் நினைவு நாட்களை மறுதலிக்க எடுக்கும் ஒரு முயற்சியாகவே திலீபனின் நினைவு நினைவேந்தல் நாளை தடைசெய்ய முயற்சித்திருந்தனர். அது இன்று பல்வேறு வடிவங்களில் வெடித்து தமிழர்கள் தமது நிலைப்பாட்டை சிங்கள அரசுக்கும், சர்வதேசத்துக்கும் தெரிவித்துள்ளனர். 

த

திங்கள் தமிழர் தேசமெங்கும் நடைபெற்ற கடையடைப்புப் போராட்டம் பெரும் வெற்றியையும், மக்கள் புரட்சியை காட்டியிருக்கின்றது. அனைத்து அடக்கு முறைக்கும், உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அந்த உணர்வு கொண்ட எம் தாயக மக்களை சர்வதேசத்தில் வாழும் தமிழீழ மக்கள் அவர்கள் வாழும் திசை நோக்கி கரங்கூப்பி நிற்கின்றனர். 

j

தமிழர்களின் அரசியல் தலைமைகள் ஒன்றாக நின்று குரல்கொடுப்பதும் தமிழ் மக்களுக்கு இனிப் பெரும் நம்பிக்கையைக் கொடுப்பதோடு தாயகம், தமிழ்நாடு, புலம்பெயர் தமிழீழ மக்கள் தொடர்ந்தும் வீரியமாக பயணிக்க வேண்டும் என்பதைத்தான் தியாக திலீனின் 2020 ஆண்டு நினைவேந்தல்கள்  எல்லோருக்கும் எடுத்தியம்பியுள்ளது.