தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவுசுமந்தவணக்கநிகழ்வு!

செவ்வாய் அக்டோபர் 01, 2019

இந்தியஅரசிடம் 5 அம்சக்கோரிக்கைகளைமுன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை 12 நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திஈகைச்சாவைத் தழுவிக்கொண்டதியாகதீபம் லெப்.கேணல் திலீபன்அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடிஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர் மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர்; ஏற்றப்பட்டுஅகவணக்கம்,சுடர்வணக்கம,; மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.   மக்களால் சுடர்; மற்றும் மலர்வணக்கம்செலுத்தப்பட்டசமவேளையில் சுவிஸ் தமிழீழ இசைக்குழுவினரோடு இளம் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; காணிக்கையாக்கப்பட்டன.

இவ்வெழுச்சிநிகழ்வில்,இந்தியவல்லாதிக்கத்திற்கெதிராகஅகிம்சைப் போரில் விதையானதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவுகள் சுமந்துகனத்த இதயங்களுடன் பலநூற்றுக்கணக்கானமக்கள் கலந்துகொண்டதோடு,மண்டபம் நிறைந்தமக்கள் கலந்துகொண்டமையானதுஎழுச்சியுடன்,மிகவும் உணர்வுபூர்வமாகவும்,நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுசுமந்தஇவ் வணக்கநிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள்,எழுச்சிக் கவிதைகள், இளையோர்களின் எழுச்சிநடனங்கள்,தியாகதீபம் அவர்களதுவரலாற்றுப்பயணம் சார்ந்தசிறுகாணொளித் தொகுப்பும் அகன்றவெண்திரையில் காண்பிக்கப்பட்டதோடு,காலத்திற்கேற்பகருப்பொருளைக் கொண்டஎழுச்சிப்பேருரையும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியாகநம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவு பெற்றன.