தலைமையின் தொடர்புகளற்ற நிலையில் போராளிகள் எப்படிச் செயற்படவேண்டும். செய்துகாட்டிய தளபதி.

திங்கள் ஜூன் 10, 2019

யாழ்ப்பாணத்தைவிட்டு இயக்கம் வன்னிக்கு வெளியேறிய பின்பு சாவகச்சேரியில் இராணுவம்மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இது இயக்கத்தின் திட்டத்திற்கு ஏற்ப நடத்தப்படவில்லை ஆதலால் இயக்கம் ஒருமுறை திகைத்தது.

யார் அதனைச் செய்கிறார்கள்?
உண்மையில் அத்தாக்குதல் நடவடிக்கைகளுக்கு யார் தலைமை தாங்குகிறார்கள்? என்பதுபற்றி இயக்கம் அறிந்துகொள்ளவதற்காக பொட்டம்மான் அவர்களுக்கு தலைமையால் அதனைக் கண்டறிந்நு கூறும்படி பணிக்கப்படுகிறது.

அவ்வேளைதான் தகவல் கிடைக்கப்பெற்றது அது வேறுயாருமல்ல எங்கள் மகேந்தி அண்ணாதான் அத்தாக்குதல்களை ஒருங்கிணைத்து அதனை நடத்துகிறார் என்று.

மாத்தையாவின் துரோக செயற்பாடுகளால் இயக்கத்துக்குள் ஏற்பட்ட ஒருசில குழப்பங்களுக்குள் சிக்கிக்கொண்ட மகேந்தி அண்ணாவை இயக்கம் வீட்டிற்கு அனுப்பியிருந்தது.
ஆனால் மகேந்தி அண்ணா இயக்கம் மீதான,தலைவர் மீதான,கொள்கைமீதான தனது விசுவாசத்தை என்றுமே விட்டுக்கொடுத்ததில்லை.

யாழ்மண்ணைவிட்டு இயக்கம் வெளியேறிபின்பு மகேந்தி அண்ணை யாழிலேயே தங்கிவிட்டார்.
தலைமறைவாக வாழ்ந்துகொண்டே துப்பாக்கிகள் எதுவுமின்றி கத்தியுடனும்,
வாளுடனும் இராணுவம் மீதான தாக்குதல்களை ஆரம்பித்து துப்பாக்கிகளைக் கைப்பற்றி பின்னர் அவற்றைக்கொண்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தினார்.

தலைவர் திரும்ப கூப்பிட்டு பாராட்டி
யாழ் படையணிகளின் அனைத்துப்பொறுப்பையும் மகேந்தி அண்ணையிடம் ஒப்படைக்கும்படி அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

தலைவரின் அல்லது இயக்கத்தின் அதன் தலைமையின் தொடர்புகளற்றுப் போய்விட்ட நிலையில் இனவிடுதலைக்காக அந்த இயக்கத்தின் கொள்கைவழி பயணித்து போராட முடியும் என்கிற உயரிய சிந்தனையை அனைத்துப் போராளிகளுக்கும் பாடமாக வழிகாட்டி நின்ற வீரத்தளபதிக்கு எமது வீரவணக்கம்.