தலாய் லாமா மந்திரம்!

புதன் சனவரி 29, 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மந்திரம் ஒன்றை உச்சரிக்கும் படி கூறியுள்ளார். 

 "ஓம் தரே ட்டுரு சோஹா" இந்த மந்திரத்தை எல்லாரும் சொல்லுங்க.. இதை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம் என்று திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா தெரிவித்துள்ளார். 

 சீனாவில் உள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஏதாவது அறிவுரை சொல்லும்படி, தலாய்லாமாவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
 
 ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வசித்து வருகிறார். அவருக்குதான் புத்த மதத்தைப் பின்பற்றுவோர் அறிவுரை சொல்லும்படி ;கேட்டிருந்தனர்.
  
 இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் "ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா" என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் மன அமைதி, கவலையில் இருந்து விடுபடலாம், இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும்..." என்று தலாய் லாமா தெரிவித்திருக்கிறார். 


 இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.