தளபதி லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

17.09.1991 அன்று தமிழீழத்தின் இதயபூமி என அழைக்கப்படும் மணலாறு மாவட்டம் நோக்கி சிறீலங்கா இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேசன் மின்னல்” இராணுவ நடவடிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின் போது..

வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் ஜஸ்ரின், 2ம் லெப்டினன்ட் மில்ராஜ், வீரவேங்கை அறிவழகன், வீரவேங்கை லோறன்ஸ், வீரவேங்கை சுரேன், வீரவேங்கை குகநேசன் ஆகிய மாவீரர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.