தமிழ் ஆசான் முனைவர் சின்னத்துரை கமலநாதன் அவர்கள் சாவடைந்தார்!

வியாழன் மார்ச் 14, 2019

தமிழ் ஆசான் முனைவர் சின்னத்துரை கமலநாதன் அவர்கள் 13.03.2019 வியாழன் இன்று காலை அவர் வாழும் ஜேர்மனி நாட்டிலே சாவடைந்துள்ளார்.

புலத்தில் பல்லாயிரம் தமிழ்க்குழந்தைகளின் தாய்மொழிக்கல்வியில் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் நூலாக்கத்தில் தன்னை இணைத்து குழந்தைகளின் தமிழ்க்கல்வியை இலகுவாக்கி படிக்க வைத்த பெருமையில் இவரின் பங்கும் அளப்பரியது. சாவடையும் வரை தமிழ்ப்பணியாற்றிய இவரின் பிரிவானது அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, தமிழ் உலகிற்கே பாரிய இழப்பாகும்.

இவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் அனைவருடனும் எமது துயரினைப் பகிர்ந்துகொள்கின்றோம்.