தமிழ் குடும்பத்தின் பொறுப்பற்ற செயல்

ஞாயிறு நவம்பர் 29, 2020

லண்டனில் கொரோனா சட்டத்தினை மீறி தமிழ் குடும்பம் ஒன்று மகளுக்கு வீட்டில் -பூப் புனித நீராட்டு விழா செய்துள்ள நிலையில், விழாவுக்கு சென்ற 25 தமிழர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.


மிகவும் இரகசியமாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் தூரத்தில் காரை நிறுத்தி விட்டு, உறவினர்கள் குறித்த விழாவிற்கு சிறுது சிறிதாக சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வங்கியில் வேலை செய்யும் பெண் ஒருவர், வங்கிக்கு சென்று. மதியம் வேலை முடித்த பின்னர் அங்கேயே உடைகளை மாற்றி குறித்த நிகழ்வுக்கு சென்றுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணிற்கு கொரோனா இருந்தமை அவருக்கே தெரியாத நிலையில், விழாவில் கலந்துகொண்ட சுமார் 25 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.