தமிழ் தலைமைகள் தயவு செய்து ஓய்வெடுங்கள் முகநூல்வாசியொருவர்!

வியாழன் சனவரி 30, 2020

இன்றைய காலகட்டத்தில் எது இருக்கோ இல்லையோ கண்டிப்பாக எல்லோரும் முகநூல்வாசிகளாகவே இருக்கின்றோம். அவற்றில் பலவற்றினை நம் பதிவிடுகின்றோம். மற்றவர்களின் பதிவுகளையும் நாம் காணுகின்றோம்.

அந்தவகையில் முகநூல் வாசியொருவர் எமது தமிழ் தலைமைகளுக்காக போட்டிருந்த பதிவு இது…

தயது செய்து ஒதுங்கி கொள்ளுங்கள் இதுவரை நீங்கள் ஆற்றிய பணிகள் போதும் சிறுவயது முதல் இதுவரை இந்த இனத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்த உங்கள் தேகங்களுக்கு ஓய்வு கொடுங்கள்......

ஒருமனிதன் எவளவுகாலம் தான் உழைப்பது அதுவும் தனது குடும்பத்துக்காக உழைப்பவனுக்கே ஒரு கட்டத்தில் நடுத்தரவயதை கடந்ததும் ஓய்வு தேவைப்படுகின்றது. வீடும் வீட்டிலுள்ளோரும் அதனை உணர்ந்து ஓய்வும் கொடுக்கிறார்கள் அதுதான் முறையானதும் கூட அந்த நிலையில் குடுபங்களை மறந்து இனத்துக்காக உழைக்கும் உங்களுக்கு ஓய்வு தேவைப்படுமல்லவா .?

எவ்வளவு காலம் உழைத்துள்ளீர்கள் எவளவு ஓட்டம், பேச்சு, உடல்சோர்வு, மனச்சோர்வு, விமர்சனம், என அனைத்தையும் எதிர்கொண்டு இதுகாலவரை நீங்கள் ஆற்றிய பணிக்காக இனத்தின் சார்பில் இளையோர்கள் நாங்கள் நன்றி சொல்லுக்கின்றோம்.

புதிய சிந்தனையுடன் விவேகம் வேகம் என இனத்தின் எதிர்கால இருப்பை,நலனை பாதுகாக்க இளைய சமூகம் தன்னை தயார்படுத்துயுள்ளது.

2009 க்கு முன்வரை பெரும்பாலான இளையோர் அரசியலில் ஆர்வமற்றே இருந்துள்ளார்கள். காரணம் இயங்குநிலையிலிருந்த மாபெரும் சக்தி அனைத்தையும் ஆக்கபூர்வமாக கையாண்டது.

கடந்த 10 கால வருட சக்தியிழப்பு இடைவெளியில் இளையவர்கள் அரசியலில் ஆர்வம் கொண்டு இனப்பற்றோடு, மொழிப்பற்றோடு,சமூகப்பற்றோடு களத்தில் துடிப்பாகவும் விவேகமாகவும் பணியாற்றுகிறார்கள்.

உங்கள் இளமைக்காலத்தை அவர்கள் செயற்பாடுகள் மூலம் நீங்கள் காணக்கூடியதாக உள்ளது. எனவே அரசியலை இளையவர்கள் கையில் கொடுத்து அமர்ந்திருந்து ஆலோசனை கூறுங்கள் அதை வரவேற்போம் அனுபவ ஆலோசனைகள் இளையவகளுக்கு இன்றியமையாதவை.

கொடிய பதவியாசைகளை துறவுங்கள் கடைசி காலத்திலாவது சராசரி மனிதனாக ஓர் நலிவடைந்த இனத்தின் மகனாக அந்த இனத்தின் தேவை உணர்ந்தோனாக வாழுங்கள்.

வாழும் காலத்தில்தான் இனப்பற்றோடு பணியாற்றவில்லை.

இறுதிக்காலத்திலாவது உணர்ந்து திருந்தி இனத்தின் எதிர்காலத்தை எதிர்காலத்தை தீர்மானிக்க போகின்றவர்களிடம் ஒப்படையுங்கள்.நீங்கள் சுமந்து வந்த அந்த பெரும் பணியை இளையவர்களிடம் கொடுத்து வேகமாக ஓடச்சொல்லுங்கள். ஓடும் போது பிழையாக ஓடினால் திருத்தம் சொல்லிக்கொடுங்கள் உங்கள் இளையோர்தான் உங்கள் பேச்சை கேட்பார்கள் ஏனெனின் இந்த இனத்தின் மாண்பு அது.
தயவு செய்து ஓய்வெடுங்கள்…..

நன்றி-முகநூல்வாசி