தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு!

ஞாயிறு ஓகஸ்ட் 04, 2019

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக ஆர்.சிவராஜாவும் செயலாளராக யோ.நிமல்ராஜ், பொருளாளராக பி.விக்னேஸ்வரன், ஆகியோரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை உப தலைவர்களாக அனந் பாலகிட்ணர், சி.தில்லைநாதன் ஆகியோரும், உப செயலாளராக கணபதி சர்வானந்தாவும் உப பொருளாளராக இ.நிர்ஷனும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக என்.வித்யாதரன், ஆர்.பாரதி, எஸ்.ஸ்ரீகஜன்,  கு.ஜெயேந்திரன், அ.நிக்‌ஷன், எஸ்.ராஜஜோதி, இரா.செல்வராஜா, ஜி.வாஸ் கூஞ்சா, எம்.பிரேம்ராஜ், வீ.பிரியதர்ஷன் மற்றும் ச.பிரதீபன், ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் பிராந்திய இணைப்பாளர்களாக வடக்குக்கான இணைப்பாளர்களாக தர்மினி பத்மநாதன் மற்றும் யோ.ஜூட்நிமலன் ஆகியோரும், கிழக்கு மாகாணத்துக்கான இணைப்பாளராக ச.மணிசேகரனும், மலையகத்துக்கான இணைப்பாளராக கி.ஹரேந்திரனும் சபையால் தெரிவு செய்யப்பட்டனர்.