தமிழ்ச்சோலை இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள்!

ஞாயிறு ஜூலை 07, 2019

பிரான்சில் நேற்று இரண்டாவதுநாளாக இடம்பெற்ற தமிழ்ச்சோலை இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள்!   


பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள் இரண்டாவது நாளாக நேற்று (06.07.2019) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சார்சல் CENTRE SPORTIF NELSON MANDELAல் அமைந்துள்ள மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத் தூபியின் முன்பாக அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர்ஏற்றப்பட்டது. சுடரினை பிரா மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. 

ஆரம்ப நிகழ்வாக குறித்த மைதானப் பகுதின்சு தமிழச்சங்கங்களின் கூட்டமைப்புப்பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன்; அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து செயற்பாட்டாளர்கள் மலர்வணக்கம் செலுத்தினர். அதனையடுத்து போட்டி முகாமையாளர் திரு.இ.இராஜலிங்கம் அவர்கள் போட்டிகளை ஆரம்பித்துவைத்தார்.


சோதியா இல்லம் (சிவப்பு), அங்கையற்கண்ணி இல்லம் (நீலம்), ராதா இல்லம் (மஞ்சள்), மாலதி இல்லம் (செம்மஞ்சள்), சார்ள்ஸ் இல்லம் (பச்சை), ஜெயந்தன் இல்லம் (ஊதா)ஆகிய இல்லங்களிடையே ஓட்டம், உயரம் பாய்தல், நீளம் பாய்தல், குண்டுபோடுதல், தட்டெறிதல்  போன்ற விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.

போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் உடனுக்குடன் வழங்கிவைக்கப்பட்டன.  கடந்த 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை தெரிவுப்போட்டியாக ஆரம்பமாகி நேற்று 06.07.2019 சனிக்கிழமையும் தெரிவுப்போட்டியாக இடம்இபற்று முடிந்த நிலையில், தொடர்ந்து  இன்று  07.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இறுதிப்போட்டிகள்  இடம்பெறவுள்ளன. புலம்பெயர் மண்ணில் எமது தமிழ் சிறார்களின் திறமைகளை கண்டு வியந்து மகிழ அனைவரையும் வருமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.