தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் வாழ்த்துச் செய்தி!

சனி சனவரி 02, 2021

நம்பிக்கை வாழ்வின் ஆதாரம். வழமையை விடக் கூடுதலான எதிர்பார்ப்புகளுடன் பிறந்துள்ளது 2021. கடந்த ஆண்டு எமக்குத் தந்த அனுபவங்களால் புத்தாண்டு மீதான எதிர்பார்ப்பு வழமையைவிட அதிகமாகவுள்ளது. கோவிட்-19 அநேகரது வாழ்வை மாற்றியமைத்திருக்கின்றது. 

எல்லாத் தடைகளும் நீங்கி 2021 சிறப்பானதாக அமையும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் அனைவரும் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் நேரமிது.    தமிழ்ச்சங்கங்களின் உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவருக்கும் 2021 வளமாய் மகிழ்வாய் நிறைவாய் அமைய வாழ்த்திநிற்கின்றது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.

புத்தாண்டில், புதிய நம்பிக்கையுடன் எம்செயற்பாடுகளை முன்னெடுப்போம். வழமைபோல் என்றும் தமிழால் இணைந்திருப்போம். தமிழின் மேன்மைக்காய் உழைப்போம்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்

.ASSOCIATION TAMOULCHOLAI


165 Bd de la Villette75010 ParisFRANCE


இணையம்:    http://tamoulcholai.frதொலைபேசி எண்:   09 84 06 38 83புதன் – ஞாயிறு : 14.30 -19.30

‘’நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்’’