தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் சாட்சியாக நடந்த திருமணம்!

வியாழன் ஜூலை 04, 2019

புலம்பெயர் தமிழ் ஜோடியின் திருமணம் ஒன்றின் காணொளி ஈழத்தமிழர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

குறித்த திருமணம் ஜரோப்பிய நாடொன்றில் நடைபெற்றுள்ளது.

வழக்கமாக தமிழர் மரபின் படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பல மாத்திரங்கள் ஓதி திருமணம் இடம்பெறும்.

ஆனால் இந்த திருமணம்   தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன், மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து இறந்தவர்களின் சாட்சியாக நடைபெற்றுள்ளது.

குறித்த திருமண நிகழ்வில் வெள்ளைக்காரர்களும் கலந்துகொண்டிருப்பதை காணொளியில் காணக்கூடியதாக இருக்கின்றது.