தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது!

புதன் டிசம்பர் 04, 2019

தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிற்சர்லாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அந்த நாட்டில் இயங்கும் சமஷ்டி நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக இருக்கவில்லை,” என கூட்டாட்சி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 5 மில்லியன் சுவிஸ்பிராங் சுவிசரசு செலவு செய்து தமிழர்களுக்கு நீதி கிடைத்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்காரவாதமான தாக்குதல்களை நடத்தியிருந்தாலும், அவர்களின் இலக்கு- ஆயுதப்போராட்டம் ஊடாக ஒரு சுதந்திர நாட்டிற்கான அங்கீகாரத்தை அமைப்பது ஆகும்.

இந்த தீர்ப்பு தொடர்பாக
தமிழ்முரசம் வனொலியின் சந்திப்புநிகழ்சியில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் அரசியற்செயற்பாட்டாளர் கொலம்பஸ் மற்றும் இந்த வழக்கின் மொழிபெய்பாளர்களில் ஒருவரான கீர்த்தி அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.