தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையை ஒத்த உடை அணிந்ததால் யாழ்.மாநகர காவல்படை விவகாரம் சர்ச்சை

புதன் ஏப்ரல் 07, 2021

யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அமைத்துள்ள மாநகர காவல்படை விவகாரம் பெரும் சர்ச்சையாக அமைந்துள்ளது. 

குறித்த காவற்படை தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த சீருடைகளை அணிந்துள்ளார்கள் எனவும் குறித்த சீருடைகளை உடனடியாக தம்மிடம் ஒப்படைக்குமாறும் யாழ்.பொலிஸார் மாநகர ஆணையாளரை அச்சுறுத்தியுள்ளனர். 

m

யாழ். மாநகரை தூய்மையாக வைத்திருப்பதற்காக, யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் மாநகர கட்டளைச் சட்டத்திற்கு அமைய விசேட நடவடிக்கை எடுத்திருந்தார். மாநகர சபை பணியாளர்கள் ஐந்து பேரை தனியாக எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து மாநகர காவல்படையை உருவாக்கினார். 

kk

மாநகரில்  வெற்றிலை துப்புவோர், எச்சில் துப்புவோர் போன்றோர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு குறித்த படை உறுப்பினர்கள் மூலமாக 5000 ரூபா  தண்டம் அறவிடப்படும் எனவும், மாநகரில் வீதி ஒழுங்குகளையும் இவர்கள் கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் இன்று தமது சேவைய ஆரம்பித்தனர். இதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்திருந்தது. 

எனினும், உடனடியாக களத்தில் இறங்கிய யாழ். பொலிஸார் இந்தப் படை உருவாக்கம் தொடர்பாக யாழ். மாநகர ஆணையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலதிகமாக ஆணையாளர் தனிமையாக வைத்து விசாரிக்கப்பட்டார். 

kk

இறுதியில், மாநகர காவல்படையின் சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையை ஒத்திருப்பதாகவும் இதனால் குறித்த சீருடைகளை உடனடியாக ஒப்படைக்குமாறும் விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறும் மாநகர ஆணையாளரை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.