தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும் ! பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-

செவ்வாய் சனவரி 12, 2021

தமிழர்கள் ஒன்றுபட்டால், குறிப்பாக மாணவர்கள் ஒன்று பட்டால் இலக்குகளை எட்ட முடியும் என்பதற்கு இது உதாரணம். தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவுத்தூணை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை இடித்த சிங்கள இனவெறி அரசின் செயலைக் கண்டித்து 9 தமிழ் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டதன் பயனாகத் தான் இது சாத்தியமாகியிருக்கிறது.

தங்கள் உடலை வருத்தி இதை சாதித்த மாணவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் தமிழர்கள் ஒன்றுபட்டால், குறிப்பாக மாணவர்கள் ஒன்று பட்டால் இலக்குகளை எட்ட முடியும் என்பதற்கு இது உதாரணம்.

ஈழத்தமிழர்களின், மாணவர்களின் இந்த ஒற்றுமையும் போர்க்குணமும் தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.