தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் - 2019

திங்கள் நவம்பர் 04, 2019

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் இன்று 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.00 மணிக்கு பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் இடம்பெற்றது. 

நந்தியார் தமிழ்ச் சங்கத் தலைவர் சத்தியகுமார் அவர்கள் சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின.

5

இன்றைய போட்டிகளில் கவிதை, பிரெஞ்சு மொழியிலான கட்டுரை, அனைத்துப் பிரிவினருக்குமான தனிநடிப்பு போன்ற போட்டிகள் நடைபெற்றிருந்தன. தனிநடிப்புப்போட்டியில் மழலையர் பிரிவு போட்டியாளர்களின் நடிப்பு வந்திருந்த மக்கள் அனைவரையும் வியந்து பார்க்க வைத்தது. பெற்றோர்கள் இப்போட்டியாளர்களுக்கு கொடுத்த ஊக்கமும், அவர்கள் தெரிந்தெடுத்த விடயமும் நடிப்பும் மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

தனிநடிப்புப் போட்டிக்கு நடுவர்களாக பிரபல கலைஞர்களான திரு.பரா, திரு.செல்வக்குமார், திரு. இரா குணபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இன்று நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஏனைய போட்டிகளான பேச்சு, பாட்டு ஆகிய போட்டிகள் நவம்பர் மாத வார விடுமுறைநாட்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டிகள் பள்ளிமட்டங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.