தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020

செவ்வாய் ஓகஸ்ட் 11, 2020

தாயகவிடுதலையைநெஞ்சினில் சுமந்து இறுதிவரைகளமாடிதமது இன்னுயிர்களை உவந்தளித்த எமதுமண்ணின் அழியாச்சுடர்களானமாவீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகளானாது 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசகமைதானத்தில் மிகவும் சிறப்பாகவும்,எழுச்சியாகவும்நடைபெற்றது.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின்விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன்,சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்,அகவணக்கம்,மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

தமிழ்த் தேசியத்திற்குவலுச்சேர்க்கவும்இதாயகம் நோக்கியதேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், மாவீரர்களின் தியாகநினைவுகள் ஊடாக தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும்நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் நினைவுசுமந்த இவ் விளையாட்டுகளில்  தற்போதையகொரோனாத் தொற்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் சுவிஸ் அரசின் சுகாதராவிதிமுறைகளைக் கடைப் பிடித்து நூற்றுக்கணக்கானபோட்டியாளர்களோடுதமிழினஉணர்வாளர்களும்இவிளையாட்டுஆர்வலர்களும்தாயகநினைவுகளைசுமந்தபடிஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இரு தினங்களும் நடைபெற்றஆரம்பவணக்கநிகழ்வுகளில்; சுவிசின் பலகழகங்களில் இருந்தும் கலந்துகொண்ட இளம் தலைமுறையினர் மிகுந்தபற்றுடனும்,ஆர்வத்தோடும் உரியநேரத்தில் பங்குபற்றிஎமதுமாவீரர்களுக்குவணக்கம் செலுத்தியமையானதுஅவர்களின் தேசியஉணர்வையும்,பற்றையும் வெளிப்படுத்திநின்றது.

இளையதலைமுறையினரிடம்தமிழீழவிடுதலைப் போராட்டத்தடங்கள்,மாவீரர் தியாகங்கள், அவர்களின் வீரவரலாறுகளை நினைவிற் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டஇப் போட்டிகளானதுவளர்ந்தோர் உதைபந்தாட்டம்,  இளையோர் உதைபந்தாட்டம்,பெண்கள் உதைபந்தாட்டம்,கரப்பந்தாட்டம்,துடுப்பாட்டம் போன்றபிரிவுகளில் அனைத்து விதமான போட்டிகளும்; ஒருங்கேஆரம்பிக்கப்பட்டுசிறப்பாகஇரு தினங்களும் நடைபெற்றதுடன்  29வதுமாவீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றகழகங்களைச் சேர்ந்தவீரர்களுக்கான பதக்கங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டதுடன், இதுவரைகாலமும் இவ் சுற்றுப்போட்டிகளைச் சிறப்பாகநடாத்தித் தந்தவர்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்துகொடிகள்அனைத்தும் இறக்கப்பட்டுதாரகமந்திரத்துடன் போட்டிகள்; சிறப்பாகநிறைவடைந்தன. 

இவ் விளையாட்டுப் போட்டிகள்சிறப்பாகநடைபெறஅனைத்துவகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கியஅனைத்துக் கழகங்கள்,கழகவீரர்கள்,கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள்,   ஆதரவாளர்கள் ,செயற்பாட்டாளர்கள், இன உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமதுஉறவுகளுக்கும் பாராட்டுதல்களையும்,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழு
 

t