தமிழின அழிப்பின் சாட்சியம் - முள்ளிவாய்க்கால் கஞ்சி

புதன் மே 18, 2022

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , யேர்மனி பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு திங்கட்கிழமை ( 16.05.22) மாலை நேரம் கஞ்சி மாதிரியான உணவு வழங்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் ஒரு நேர உணவுக்கு கஞ்சிக்காக காத்திருந்த நேரத்தில் ஈவிரக்கம் அல்லாமல் , குழத்தைகளையும் , சிறுவர்களையும் கொத்துக் குண்டுகளால் கொன்றது சிங்களம்.

அந்த வலி நிறைந்த நாட்களை மீட்கும் வகையில் மேற்கொண்ட மனிதநேய நற்பணி சிறப்பாக அமைந்தது.