தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி உரத்துக் குரல் எழுப்ப வாரீர்

வெள்ளி சனவரி 08, 2021

மீண்டும் தளிர்விடும் காய்ந்த மரத்தின் இடுக்குகளுக்கு பலம் கொடுக்கும் நம்பிக்கையாளர்களாய் நாம் இருப்போம். இணைந்து பணி செய்வோம் நாமனைவரும் உணர்ந்து பணி செய்வோம்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
01.03.2021; திங்கள் பிற்பகல் 14:30 - 17:00 மணி
UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்
போராட்டமே வாழ்வாகிப்போன ஒரு இனத்தின் விழுதுகள் நாம்.

அதை தாங்கும் வேர்களும் நாமே. பட்டுப்போனாலும் சரிந்து விழவிடாமல் தாங்கி நிக்கும் வேர்களும் விழுதுகளுமாய் நாம் நிற்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

உரத்துக் குரல் எழுப்ப காலம் உன்னையும் அழைக்கின்றது வா தமிழா!