தமிழின அழிப்பு நினைவுத் தூபி இடிப்பு - பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஆழ்ந்த கவலை

சனி சனவரி 09, 2021

யாழ் பல்கலைக் கழகத்தில் இருந்த தமிழின அழிப்பு நினைவுத் தூபியை சிறீலங்கா அரசு இடித்தமையையிட்டு பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.

 

இது குறித்துத் தனது ருவிட்டர் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டிருக்கும் தென்னாசிய விவகாரங்களுக்கான பிரித்தானிய வெளியுறவு இணை அமைச்சர் ரறீக் அகமட் பிரபு, யுத்தத்தில் இறந்த மக்களை நினைவுகூர அனுமதிப்பதன் மூலமே நல்லிணக்கத்தையும் அமைதியை ஏற்படுத்த முடியுமென தெரிவித்துள்ளார்.