தமிழக அரசை குறைகூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலை!

ஞாயிறு அக்டோபர் 13, 2019

தமிழக அரசை குறை கூறுவதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. மானியமாக 75 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள அம்மா உணவக திட்டத்தை அனைத்து மாநிலத்தவரும் பின்பற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச மடிக்கணினி திட்டத்தை உத்தரபிரதேச அரசு செயல்படுத்த முயன்றது. அவர்களது முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.

தமிழக அரசு இலவச மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தமிழக அரசை குறை கூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது.

முக ஸ்டாலின்.

முன்பெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்று கூறினர். தற்போது ‘கம் பேக் மோடி’ என்று கூறுகிறார்கள். இன்று உலகம் முழுவதும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தை புகழ்ந்து பேசி வருகிறார்கள். மோடி வேட்டி கட்டி வந்தது வரவேற்கத்தக்கது.

‘பிகில்’ பட ஆடியோ வெளியீட்டில் நடிகர் விஜய் ஜனநாயக முறையில் பேசினார். அதனை நாங்கள் ஜனநாயக முறையில் சந்தித் தோம். இவ்வாறு அவர் கூறினார்.