தமிழக அரசின் அறிவிப்புக்கு, அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

வியாழன் ஏப்ரல் 23, 2020

கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கிய தமிழக அரசின் அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

கொரோனா சிகிச்சையின் போது உயிரிழக்கும் மருத்துவர்களை உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்றும், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.

எனது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, கொரோனா சிகிச்சையின்போது உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு விருது, உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்கு மற்றும் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.