தமிழக அரசியலில் பரபரப்பு!!!

சனி ஜூன் 08, 2019

அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றும் நோக்குடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயற்படுவதால்,அவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் மோதல் அதிகரித்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் தோல்வி,அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காதமையினால் அக்கட்சிக்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் யாரை நிறுத்துவது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அ.தி.மு.க.சார்பில் மூவர் தேர்வு செய்ப்படுவதற்கு வாய்ப்பு காணப்பட்டாலும் பா.ம.க.வுக்கு ஒரு இடத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மற்றைய இடத்தினை பா.ஜ.க கோருகின்றமையினால் ஒரு இடத்திற்கு மாத்திரமே அ.தி.மு.க சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவாரென கூறப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் சிலர் போட்டியிட விரும்புகின்றனர்.அதேபோன்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் போட்டியிட விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு இரு தரப்பினரும் தங்களது ஆதரவாளர்களை நிறுத்துவதில் உறுதியாக உள்ளமையால் மோதல் அதிகரித்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.