தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த ரூ621 கோடி தேவை! தமிழக தேர்தல் ஆணையம்-

தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த ரூ.621 கோடி தேவை" என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மாவட்ட வாரியாக தொகுதிகளை தேர்வு செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது என அரசியல் கட்சிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளனர்.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த ரூ.621 கோடி தேவை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசிடம் நிதி கேட்டுள்ளோம் என்றும் கொரோனா காலம் என்பதால் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.