தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி

திங்கள் ஜூலை 05, 2021

 தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி 2021 இன் முதல் நிகழ்வு நேற்றையதினம்(03.07.2021) மிகவும் சிறப்பாகத் தொடக்கி வைக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று அனர்த்தம் கரணியமாக இம்முறை தென் மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள கணிசமான தமிழாலயங்களின் பங்கேற்புடன் 9:00 மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன.

மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு வாய்பாட்டு, விடுதலை கானங்கள் வில்லிசை எனத் தொங்கி விடுதலை நடனங்கள் என முடியும்வரை யேர்மனியிலே தமிழர்கலைகளின் திருவிழாவாகப் போட்டிக் களம் விறுவிறுப்போடு நகர்ந்ததோடு பார்வையாளர்களைப் போட்டியாளர்கள் போட்டி தொடங்கியதிலிருந்து நிறைவுவரை தமது போட்டிகளாற் கட்டிபோட்டிருந்தனர் என்றே கூறலாம்.

தென் மற்றும் தென் மேற்கு மாநிலப் போட்டிகள் நிறைவுற்றுள்ள அதேவேளை மத்தி, வடமத்தி மற்றும் வடமாநிலங்களுக்கான போட்டிகள் முறையே 04.09.201,05.09.2021 மற்றும் 11.09.2021 நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.