தமிழக மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்!

செவ்வாய் மே 14, 2019

தமிழக மக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் இந்தாண்டு சராசரியை விட 69 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. ஜனவரி முதல் மே வரை 108 மில்லிமீட்டருக்கு பதில் 34 மிமீ மழை பெய்துள்ளது.

எனவே, தமிழக மக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அளித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.