தமிழகத்தில் 33 பேர் கைது:

செவ்வாய் அக்டோபர் 15, 2019

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த தாக நாடு முழுவதும் கைதான 127 பேரில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஐஜி அலோக் மிட்டல் தெரி வித்துள்ளார்.

தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புல னாய்வு முகமை இயக்குநர் யோகேஷ் சந்தர் மோடி உட்பட பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண் டனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் என்ஐஏ ஐஜி அலோக் மிட்டல் கூறியதாவது:

சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இந்நிலையில், இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப் பைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் இருந்து செயல்பட்டதை தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது. அதையடுத்து கேரளாவிலும், தமிழகத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, பலரை கைது செய்தனர்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசா ரணையின்பேரில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாத அமைப்புடன் தொடர்பில் இருந்த தாக இதுவரை 127 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும், தெலங்கானாவில் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம், கேரளாவில் கைது செய் யப்பட்ட தீவிரவாத இயக்க ஆதரவாளர் கள், ஜஹ்ரான் என்பவரின் வீடியோ உரைகளைக் கேட்டுதான் தாங்கள் தீவிர வாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித் துள்ளனர். இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் தற்கொலைப் படையாக செயல்பட்டது ஜஹ்ரான் ஹசீம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம் தொடர்பாகவும் எங்களுக்கு துப்பு கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக சீக்கியர்களிடம் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் இந்த அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக உத்தரப்பிரதேசத் தில் 5 பேரை கைது செய்துள்ளோம். அதேபோல, வங்கதேசத்தை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி), இந்தியாவில் பிஹார், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தங்கள் இயக்கத்துக்கு ஆதரவாளர்களை திரட்டி வருவதாகவும் தகவல் கிடைத்துள் ளது. தீவிரவாத செயல்களை அரங் கேற்றும் திட்டத்தோடு பலரையும் மூளைச் சலவை செய்து வருகிறது. பெங்களூரில் சுமார் 20 மறைவிடங்களில் ஜேஎம்பி அமைப்பினர் பதுங்கியுள்ளதாக துப்பு கிடைத்துள்ளது.

ராக்கெட் லாஞ்சர் சோதனை

தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மலைப்பகுதியில், ஜேஎம்பி அமைப்பினர், ராக்கெட் லாஞ்சர் சோதனை களை நடத்தியுள்ள தகவலும் விசாரணை யில் தெரியவந்துள்ளது. மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்கப்பட்ட தற்கு பழி தீர்க்க, புத்த வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஜேஎம்பி அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.