தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - சென்னையில் 300-ஐ தாண்டிய பாதிப்பு

செவ்வாய் ஏப்ரல் 21, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் நாள்தோறும் ஒன்று, இரண்டு பேர் என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரையில் 1477 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 பேர் பலியானதால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வந்த புதுக்கோட்டையில் முதல் பாதிப்பு தென்பட்டுள்ளது. சென்னையில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, திருச்சி, கடலூரில் தலா 4 பேரும், விழுப்புரம் 3 பேரும், திண்டுக்கல், திருவள்ளூர், அரியலூரில் தலா 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

s

s

இதன்மூலம், தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை நீடித்து வருகிறது. சென்னையில்303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 133 பேரும், திருப்பூரில் 109பேரும், திண்டுக்கல்லில் 76 பேரும், ஈரோட்டில் 70 பேரும், நெல்லையில் 62 பேரும், செங்கல்பட்டில் 53 பேரும், நாமக்கல், திருச்சியில் தலா 50 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

e