தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்!

செவ்வாய் ஜூலை 16, 2019

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  

டெல்லியில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் தர்மேந்திரபிரதான் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
 
தமிழகத்தில் பந்தநல்லூர்,புவனகிரி, நன்னிலம் உள்ளிட்ட 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.