தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா

செவ்வாய் ஜூன் 16, 2020

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சக்கட்டமாக 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிரித்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக 1800-க்கு மேல் இருந்தது.

இந்நிலையில் இன்று 1,515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், இதுவரை இல்லாத அளவிற்கு 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. இன்று இறந்தவர்களில் 14 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.

இன்று ஒரே நாளில் 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 26,782 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 19,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 7,48,244 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.