தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா!!

புதன் ஜூன் 03, 2020

தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 29-ந்தேதி 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மே 30-ந்தேதி 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மே 31-ந்தேதி 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்தது. ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (01-06-2020) 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்தது.

நேற்று தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்தது. நேற்று 13 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரித்தது. 536 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 13,706 பேர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 11 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.இன்று 610 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 14,316 ஆக உயர்ந்துள்ளது.