தமிழகத்தில் கொரோனாவுக்கு 8வது பலி

புதன் ஏப்ரல் 08, 2020

தமிழகத்தில் ஏற்கனவே நேற்று வரை கொரோனாவுக்கு 6 பேர் பலியாகி இந்த நிலையில் நேற்று மாலை பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்தனர் இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணமடைந்தார்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்த நபர் ஒருவர் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தற்போது தமிழகத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் உயிர் பலி எண்ணிக்கை குறைவு என்றாலும் தினமும் ஓரிருவர் கொரோனாவால் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பலியாகும் எண்ணிக்கை என்று முடிவுக்கு வரும்? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது