தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது!
புதன் சனவரி 13, 2021

பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள்;
-பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்
-வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்
-வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்
-10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்
-பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்
-ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்
-மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது என அரசு அறிவித்துள்ள வழிமுறையில் குறிப்பிட்டுள்ளது.