தமிழகத்திற்கு தலைகுனிவை ப. சிதம்பரம் ஏற்படுத்தி உள்ளார்- அமைச்சர் சி.வி.சண்முகம்

வியாழன் ஓகஸ்ட் 22, 2019

தமிழகத்திற்கு ஒரு தலைகுனிவை ப. சிதம்பரம் ஏற்படுத்தி விட்டதாக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடந்தது. இதனை திறந்து வைக்க வந்த அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. அரசையும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் குறை கூறியவர் ப.சிதம்பரம். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இறைவன் அவரை கைது செய்து உள்ளான்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு கனிமொழி கைது செய்யப்பட்டார். தற்போது சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு ஒரு தலைகுனிவை ப. சிதம்பரம் ஏற்படுத்தி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.