தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2021 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!

புதன் செப்டம்பர் 08, 2021

 2021 தேர்வுப் பெறுபேறுகள் யாவும் கல்விக் கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கல்விக் கழகங்களால் தேர்வு முடிவுகள் தங்கள் நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பதினேழு ஆண்டுகளாகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் முன்னெடுக்கப்படுகின்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்வு இம்முறையும் சிறப்பாக நடைபெற்றது. 

தற்போதைய பொதுப்பாடின்மையான காலத்திலும் ஆசிரியர்கள் இணையவழிக் கல்வி மூலம்  மாணவர்களை நெறிப்படுத்திப் பாடங்களைச் சிறப்பாகக் கற்பித்திருந்ததை தேர்வு முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.  

மாணவர்கள் பாடநூல் வினாக்கள், இலக்கண வினாக்கள், வரலாற்று வினாக்கள் கவிதை, கட்டுரை போன்றவற்றைத் திறம்பட  எழுதியிருந்தார்கள். இத்தேர்வில் மாணவர்கள் நல்ல பெறுபேறுகள் பெற்றிருப்பதை நினைத்து  தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை பேருவகை அடைகின்றது. 

மாணவர்களின் பெறுபேறுகளை அனுப்பும் வரை உதவிய கல்விக்கழகங்களுக்கும், நிர்வாகிகளுக்கும், இளையோருக்கும், மாணவர்களுக்கும,; விடைத்தாள் திருத்தும் பணியில் பங்குகொண்ட ஆசிரியர்களுக்கும், தங்கள் பிள்ளைகளின் அடையாளம் தொலைந்து விடாமல் தங்கள் பிள்ளைகள்  தமிழனாக வாழவேண்டும் தமிழன் என்ற அடையாளத்துடன் வாழவேண்டும் என்ற அவாவுடன் இவ்விடர்க் காலத்திலும் தமிழைப்பயின்று தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளர் தமிழ் நூல்களின் தமிழ்மொழித் தேர்வில் பங்கேற்க வைத்த அனைத்துப் பெற்றோர்களுக்கும், தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. 

தமிழே எங்கள் உயிர்!