தமிழன் கடைசி வரைக்கும் தமிழனாகவே இருக்கணும்-நடிகர் மயில்சாமி

செவ்வாய் ஜூன் 04, 2019

எனக்கு மிகப்பெரிய சந்தோஷம், மோடி மீண்டும் பிரதமராக வந்தாலும்,தமிழன் தமிழனாகவே இருந்ததுதான். தமிழன் கடைசி வரைக்கும் தமிழனாகவே இருக்கணும்.

தமிழ்நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளட்டும், தேசியக் கட்சி மட்டும் ஆளக்கூடாது.அப்படி ஆள்வதாக இருந்தால், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அப்படியென்றால் பெரிய சல்யூட் அடிப்பேன். வஞ்சகம் பண்ற யாருமே தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது.
 
இந்தியா முழுக்க மோடி வந்துவிட்டார் என்றாலும், தமிழ்நாட்டில் வரமுடியவில்லையே என்று சொல்கிறார்கள்.அதற்காக நாம் பின்தங்கிப் போகவில்லை. உலகம் முழுக்கத் தமிழனை நினைக்காத நாடே கிடையாது. அதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.உலகத்திலேயே தமிழர்கள் திறமைசாலிகள்தான். உலகளவில் 8 அதிசயம் என்பார்கள்.ஆனால்,என்னைப் பொறுத்தவரை தஞ்சாவூர் பெரிய கோவில்தான் முதல் அதிசயம்”என்றார்.