தமிழ்நாட்டில் தாமரை சேற்றில் மட்டுமே வளரும்! திருமாவளவன்-

வியாழன் சனவரி 21, 2021

அதிமுகவை காவு கொடுக்கும் வேலையில் பாஜக ஈடுபடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் தாமரை சேற்றில் மட்டும்தான் வளர்வதாகவும் விமர்சித்துள்ளார்.

அதிமுகவை அழித்து பாஜக - திமுக என இருமுனை அரசியலுக்கு முயற்சி நடக்கிறது என்றும், பாஜகவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதன் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு அதிமுக துரோகம் இழைக்கிறது என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் பாமக இடம் பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடம் பெறாது என்று திட்டவட்டமாக கூறினார்.