தமிழ்நாட்டு அரசியல் பேசும் மதுபாலா!

செவ்வாய் மார்ச் 19, 2019

அக்னி தேவி படம் மூலம் மீள நடிக்க வரும்  மதுபாலா, தற்போது தமிழ்நாட்டு அரசியல் பற்றி அப்படத்தில் பேசியிருக்கிறார். 

‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. 

பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இதில் மதுபாலா பேசும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இப்படம் வருகிற மார்ச் 22-ந் திகதி வெளியாக இருக்கிறது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். சீன்டோ ஸ்டூடியோ சார்பில் ஜே.பி.ஆர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.