தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள்!

ஞாயிறு மே 03, 2020

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவால்  வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தமிழ்ப்பேரரசு கட்சி சார்பில்  அரிசி,காய்கறி,மளிகைபொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை குமரிமாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர்.கண்ணன் தலைமையில்  கட்சியினருடன் இணைந்து வழங்கி  வருகிறனர்.

தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையில் ஒரு வேளை உணவுக்கு கூட சிரமப்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையை கருத்தில் கொண்டு தமிழ்ப்பேரரசு கட்சியின் பொது செயலாளர்.கெளதமனின் ஆணைக்கினங்க மாநில துணை பொதுச்செயலாளர். கண்ணன் தலைமையில் குமரிமாவட்டத்தில் உள்ள மிகவும் சிரமப்பட்டு மக்கள் வசிக்கும்  இடங்களை தேர்ந்தெடுத்து குறிப்பாக நாகர்கோவிலில், பறக்கை, தெங்கம்புதூர், கோட்டார், புத்தேரி என மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இருக்கும் இடங்களில் வீடு தேடி சென்று தினந்தோறும் தலா 200 குடும்பங்களுக்கு மேலாக 5 கிலோ அரிசி,காய்கறி,பலசரக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைய் அடங்கிய நலதிட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு தமிழ்ப்பேரரசு கட்சி சார்பில் வழங்கி வருகின்றனர்.

கடந்த 37 நாட்களாக சுமார் 4500 பேர்களுக்கு இலவசமாக அரிசி காய்கறி,மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்...

குமரியில் தடையுத்தரவு தொடங்கிய நாள் முதல் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் தினம்தோறும்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதால் தமிழ்ப்பேரரசு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.