தமிழர் மரபுத் திங்கள் அறிவிப்பும் - தை பொங்கல் விழாவும்

வியாழன் சனவரி 13, 2022

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய மொழியான தமிழ் மொழி அதன் பன்முகத் தன்மையுடன் மேலோங்கி வளர்ந்து நிற்கின்றது. இந்த தமிழ் மரபின் நேர்த்தியை அடையாளம் கண்டு, பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தமிழ் மக்களை மேம்படுத்தவும், ஆழமாக வேரூன்றிய இந்த தமிழ் மரபின் நுட்பத்தை உலகிற்கு உணர்த்தவும் தொலைநோக்குடன் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது. தமிழர்கள் ஆண்டு முழுவதும் பல தினங்களை கொண்டாடினாலும், தைப் பொங்கல் உள்ளடங்கிய மரபுசார்ந்த அறுவடை காலத்தை " தமிழ் மரபுத் திங்களாக" கருதுகிறது.

  • பிரித்தானிய தமிழர் பேரவை 2011இல் லண்டன் ஹரோ (Harrow) நகர சபையுடன்  இணைந்து தைப் பொங்கல் விழாவினை முன்னோடி நகர்வாக மேற்கொண்டது.

  • அதைத் தொடர்ந்து, பல சமூக அமைப்புகளுடன் இணைந்து "தைப் பொங்கல்" விழா மற்றும் "தமிழ் மரபுத் திங்கள் என்பனவற்றிற்கான  அங்கீகாரம் ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கத் தொடங்கியது.

  • அடுத்து வந்த ஆண்டுகளில், பிரித்தானிய தமிழர் பேரவை தனது தலைமைக் காரியாலயத்தில் தைப் பொங்கல் விழாவினை சிறப்பாக முன்னெடுத்து பல தமிழ் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தது. இவற்றில் தமிழ் சமூக பிரதிநிதிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

  • இவ் வேளையில், கனடாவாழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கனடிய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவித்ததனை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்றிருந்ததுடன் அதனை பிரித்தானியாவில் வழிமொழியும் ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டது.

  • 2018ஆம் ஆண்டு தைப் பொங்கலை பிரித்தானியாவின் பாராளுமன்றில் பெரு விழாவாக முன்னெடுத்தது. இதில் கன்சர்வேட்டிவ், தொழிலாளர் மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சால்வை அணிந்து கலந்து கலந்து கொள்ளத தொடங்கினர். 

 

அடுத்தடுத்த ஆண்டுகளில், பிரித்தானிய தமிழர் பேரவையின் முயற்சிக்கு ஊக்கமும் ஆதரவும் அபரிமிதமாக இருந்தது. மேலும் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஏராளமான தமிழ் பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுடன் தமிழர் திருநாளை மேம்படுத்த தமிழ் இளைஞர்கள் முன்வந்தனர்.

2019இல் இவ் விழாவினை "செழுமையான மரபினைப் போற்றும் தமிழ் இளைஞர்கள்" என்றும் பின்னர் 2020இல் "தமிழ் மரபுத் திங்கள்" என்றும்  2021 இல் "தமிழ் மரபினில் சுயசார்பு" என்றும் பெயரிட்டனர்.

2021 டிசம்பரில் லண்டன் மாநகர அவையில் (London Assembly) ஜனவரி மாதத்தினை தமிழ் மரபுத் திங்கள் என பிரேரணை நிறைவேற்றுவதற்கு எம்மால் தொடங்கப்பட்ட முன்முயற்சி ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதையிட்டு பெருமிதம் அடைகின்றோம். லண்டன் மாநகர அவைக்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரித்தானிய பாராளுமன்றத்திலும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழர் பாரம்பரியத்தின் விழுமியங்களை தொடர்ந்து பரப்புவதற்கான தனது முயற்சியை பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தமிழ் மக்களுடன் இணைந்து தொடர்கிறது, மேலும் அது தனது இலக்கை அடையும் என்பதில் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையினால் வருடா வருடம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடாத்தி வரும் தை பொங்கல் மற்றும் தமிழர் மரபுத் திங்கழ் நிகழ்வு இம் முறை பாராளுமன்றின் ஜூபிளி  அரங்கில் ( Jubiliee hall) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போதைய  கொடிய  வைரசு தொற்றின் காரணமாக  மக்கள் பொது வெளியில் கூட இயலாத நிலை அதிகரித்துள்ளதால் பாராளுமன்றம் கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு அமைய அவர்களின் விதிமுறைகளை மதித்து மாற்று வழிமுறையில் மெய் நிகர் நிகழ்வாக Zoom தொழிநுட்பத்தில் இம் மாதம் 17ஆம் திகதி மாலை 7 மணியிலிருந்து 9 மணி வரை இடம்பெற உள்ளது..

எனவே  எம் உறவுகளே! எல்லோரும் பாதுகாப்பாக இருப்பிடங்களில் இருந்து இவ் விழா  நிகழ்வுகளில் பல்வேறு கலைஞர்கள், அனைத்துக் கட்சியையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிஞர்கள் உடன் இணைந்து  சிறப்பிக்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

 

When: 17 January 2022  07:00 PM – 9:00 PM (GMT) 

Topic: Thai Pongal - Tamil Heritage Month Celebration 2022 

 

Please click the link below to join the webinar:

https://us02web.zoom.us/j/82244876376?pwd=aGo4L3ZiU0Z5VXUveEpGeHNkVWEyUT09

 

Webinar ID: 822 4487 6376

Passcode: 274783

YouTube: https://m.youtube.com/channel/UCrijfF827bKXoqiB54wrqpA

Facebook: https://m.facebook.com/BritishTamilsForum

 

 Please click the link below to join the webinar:

 

https://us02web.zoom.us/j/82244876376?pwd=aGo4L3ZiU0Z5VXUveEpGeHNkVWEyUT09

 

Webinar ID: 822 4487 6376

 

Passcode: 274783

 

YouTube: https://m.youtube.com/channel/UCrijfF827bKXoqiB54wrqpA


Facebook: https://m.facebook.com/BritishTamilsForum