தமிழர் தாயகத்தை விட்டு சிறீலங்கா படைகள் வெளியேற வேண்டும் - பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்

வியாழன் அக்டோபர் 24, 2019

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.

 

இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை அங்கீகார மாநாட்டில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்தால், தொழிற்கட்சியின் ஆட்சியில் அதன் மீது பொருண்மியத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

 

இவ் நிகழ்வில் தொழிற்கட்சியின் நிழல் பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர் பரி கார்டினர் உரையாற்றுகையில், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறீலங்கா அரசுக்கான வணிக சலுகைகள் முடக்கப்படும் என்று தெரிவித்தார்.