தமிழர் திருநாள் வாழ்த்து - பழ. நெடுமாறன்

புதன் சனவரி 13, 2021

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக மக்கள் அனைவரும் மீட்சி பெறவும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை வாட்டி வதைத்து வரும் ஈழத் தமிழர் பிரச்னையில் விடிவு ஏற்படவும் தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சியும் மகிழ்ச்சியும் பொங்கி வழியுமாக! என வாழ்த்துகிறேன்.