தமிழர்கள் பிரித்தானிய தேசத்தின் இணைபிரியா அங்கம் - நாடாளுமன்ற உறுப்பினர் எலியெற் கொல்பேர்ன்

திங்கள் ஜூலை 20, 2020

பிரித்தானிய தேசத்தின் இணைபிரியாத அங்கமாகத் தமிழர்கள் திகழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் எலியெற் கொல்பேர்ன் தெரிவித்துள்ளார்.

 

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

பிரித்தானிய நாடாளுமன்றத்திலும், அதற்கு அப்பாலும் பிரித்தானியத் தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கும், ஈழத்தீவில் உள்ள தமிழர்களுக்கு நீதி கிட்டுவதற்கும் தேவையான பணிகளில் ஈடுபடுவதற்குத் தான் ஆவலோடு இருப்பதாகவும் தனது அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.