தமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்படும் அளவுக்கு தமிழ் தேசியம் தள்ளாடுகிறது!

புதன் நவம்பர் 13, 2019

பிரபாகரனின் வழிநடத்தல் சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்படும் அளவுக்கு தமிழ் தேசியம் தள்ளாடுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“2009ஆம் ஆண்டு வரை நாங்கள் தலைநிமிர்ந்தவர்களாக இருந்தோம்.ஒரு தலைமை எம்மை வழிநடத்தியது.

அந்த பிரபாரன் என்ற சக்தி சர்வதேச நாடுகளின் வலுவுடன் சேர்ந்து அழிக்கப்பட்ட பின்னர், தமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்படும் அளவுக்கு தமிழ் தேசியம் தள்ளாடுகிறது”என மேலும் தெரிவித்துள்ளாரை்.